கல்வியில் சிறந்த தமிழ்நாடு!!! ஆனால் ஆசிரியர்களுக்கு நாட்டிலேயே குறைவான அடிப்படை ஊதியம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/09/2025

கல்வியில் சிறந்த தமிழ்நாடு!!! ஆனால் ஆசிரியர்களுக்கு நாட்டிலேயே குறைவான அடிப்படை ஊதியம்

 1000322203


பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்று தமிழக அரசியல்வாதிகள் பெருமையாக பேசிக் கொள்ளும் இந்த வேளையில் அதிர்ச்சி தரும் புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு நாட்டிலேயே குறைவான அடிப்படை ஊதியம் வழங்குவது தமிழ் நாட்டில் தான் என்று தெரிய வந்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியம் 

தமிழ்நாடு - 20,600
மேகாலயா - 24,700
சட்டீஸ்கர் &
மத்திய பிரதேசம்- 25,300
நாகலாந்து - 28,700
மேற்கு வங்காளம் - 28,900
மணிப்பூர் 
மகாராஷ்டிரா 
ஒடிசா 
குஜராத் - 29,200
பஞ்சாப் மற்றும் 
இமாச்சலப் பிரதேசம் - 29,700
சிக்கிம் - 30,200
ஆந்திரா மற்றும் 
தெலுங்கானா - 31,040
ராஜஸ்தான் - 33,800
மிசோரம் 
கோவா
உத்தரப் பிரதேசம் 
உத்தரகண்ட் ஜார்க்கண்ட் 
பீகார் அரியானா 
அருணாசலப் பிரதேசம் 
35,400
கேரளா - 35,600
கர்நாடகா - 41,300.

கல்வியில் பின் தங்கியுள்ள பீகார் மாநிலத்தில் கூட ₹35,400 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459