தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்)*
*மாநில உயர்மட்டக் குழு*
*நாள்:18.08.2025*
**********************
*18.08.2025 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் டிட்டோஜாக் பேரமைப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை!*
*பேச்சுவார்த்தையின் அடிப்படையில் டிட்டோஜாக்கின் 22.08.2025 கோட்டை முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!*
**********************
*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 22.08.2025 அன்று சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதற்குரிய ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.*
*போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்த டிட்டோஜாக் பேரமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று(18.08.2025) காலை 9:30 மணிக்கு சென்னையில் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 12 பேரும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது.*
*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 12 பேரும் 10 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக தனித்தனியாக விரிவாக, அழுத்தமாக வலியுறுத்திப் பேசினார்கள். 1மணி 15 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்து இரண்டு நாட்களில் சாதகமான முறையில் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வதாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். இப்பேச்சுவார்த்தை நம்பிக்கையூட்டுவதாகவும், திருப்திகரமாகவும் அமைந்திருந்தது.*
*அதனைத் தொடர்ந்து இன்று (18.08.2025) பிற்பகல் 3:30 மணிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான திரு ச.மயில் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததையும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுடன் டிட்டோஜாக் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக விவாதித்து சாதகமான முறையில் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளதையும் கருத்தில் கொண்டு 22.08.2025 அன்று டிட்டோஜாக் சார்பில் சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதென டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு ஏக மனதாகத் தீர்மானித்தது. மேலும், அடுத்த வாரம் டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு மீண்டும் கூடி நிலைமையை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பது எனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.*
**************************
*இவண்*
*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு*



No comments:
Post a Comment