இன்றைய செய்திகள் 17.08.2025(ஞாயிற்றுக்கிழமை) - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/08/2025

இன்றைய செய்திகள் 17.08.2025(ஞாயிற்றுக்கிழமை)

  


🌹ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக் கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல. அன்பு, அமைதி, நிம்மதி இவைகளை பெற்ற மனிதனிடம் உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.!

🌹🌹வீடு அழகாக இருக்க வீட்டை தினமும் சுத்தம் செய்கிறோம். வாழ்க்கை சிறப்பாக இருக்க உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.!!

🌹🌹🌹மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பல ஏமாற்றங்களைத் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை அரசு பள்ளியின் தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்.

🍒🍒கல்வி நிதியை விடுவிக்க கோரிய வழக்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு

🍒🍒ஓய்வூதிய ஆய்வு குழு அறிக்கை என்னாச்சு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி.

🍒🍒ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ - பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி.

🍒🍒மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

🍒🍒எதிர்கால சவால்களுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வழிகாட்டியே மாநிலக் கல்விக் கொள்கை: பள்ளிக் கல்வி செயலர் நேர்காணல்.

🍒🍒ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழிப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு NCERT ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதலே இத்திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்ய உள்ளது                                                             🍒🍒என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி அறிவிப்பு

👉என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 1,86,475 இடங்களில், இரண்டு சுற்று கலந்தாய்வுகள் முடிவில் 92,423 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வில், 1,29,516 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 64,629 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

அவர்களில் 51,429 பேர் இடங்களை உறுதி செய்துள்ளனர். மூன்றாம் சுற்று கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி முடிவடைய உள்ளது. தற்போதுவரை 1,43,852 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வு 21-ஆம் தேதி தொடங்கும். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது."

🍒🍒குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று இரண்டாவது நாளாக நீடிப்பு.

🍒🍒ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு - முதல்வர் நேரில் ஆய்வு:

ஜம்மு-காஷ்மீர் மேக வெடிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு - மாயமான 200 பேரை தேடும் பணி தீவிரம்

3வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

🍒🍒கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிட இயக்கம்; கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு சாதகமானதாக மாறிவிடக்கூடாது 

சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருப்பதால் நட்பும் வலுவாக இருக்கிறது 

முத்தரசன் கேட்டு நான் எதையும் மறுத்தது கிடையாது

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

🍒🍒அமலாக்கத் துறையை வைத்து ஒத்துவராத எதிர்க்கட்சிகளை மிரட்டுவார்கள் என்றோம். அது நடக்கிறது" முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

🍒🍒திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்கும் இடையே உள்ள நட்பு கொள்கை நட்பு" 

-சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🍒🍒அன்புமணி வலியுறுத்தல் 

தருமபுரி மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் 

மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான சிப்காட் தொழில் வளாகம் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி🍒🍒தமிழகத்தில் பா.ஜ.க.வை மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றவர்’’..  இல.கணேசன் அரசு பணியை விட்டு அரசியலுக்கு வந்தது குறித்து நினைவுக்கூர்ந்து பகிர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன்

🍒🍒நாளை திங்கள் கிழமை டிரம்பை சந்திக்க இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

புதினுடனான சந்திப்பின் போது பேசப்பட்டவைகள் குறித்து ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் பேசுவார் என தகவல்

🍒🍒"இல.கணசன் மீது மரியாதை வைத்துள்ளோம்"

"மறைந்த ஆளுநர் இல.கணசன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்"

 - சென்னையில் நாகலாந்து

முதல்வர் நைபியு ரியோ பேட்டி

🍒🍒ரஷ்ய அதிபர் சந்திப்பதற்கு முன், டிரம்ப் தனது வலிமையைக் காட்டும் விதமாக புடினின் தலைக்கு மேல் ஒரு B2 விமானத்தை பறக்க விட்டார்.

🍒🍒சபரிமலை நடை திறப்பு.

கேரளா - வழக்கமான மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.

தமிழ் மாதமான 'ஆவணி' மலையாள மாதமான 'சிங்கம்' பூஜைகளுக்காக

சபரிமலை நடை திறக்கப்பட்டது.                                                  🍒🍒மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரும் 22ந் தேதி தமிழகம் வருகிறார்.

-நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.

🍒🍒அணு ஆயுதப் போராக வெடிக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட ஐந்து போர்களை நானே மத்தியஸ்தம் செய்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.

-மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.

🍒🍒ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியாவும், சீனாவும் உள்ளது.

இந்த நாடுகள் மீது கூடுதல் வரி விதித்தால், அது ரஷியாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். தற்போது அவ்வாறு வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை - டிரம்ப்.

🍒🍒ராகுல்காந்தியின் 'வாக்கு அதிகார யாத்திரை' பிஹாரின் சாசராம் நகரில் இன்று தொடங்குகிறது.

16 நாள் யாத்திரை செப்.1 ஆம்தேதி பாட்னாவில் முடிவடைகிறது.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் யாத்திரையில் பங்கேற்க உள்ளனர்.

🍒🍒18ம் தேதி இந்தியா வரும் சீனா வெளியுறவு அமைச்சர்.

வரும் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி..

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு.

🍒🍒சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.

👉இன்று தருமபுரியில் கள ஆய்வு மேற்கொண்டு,அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டம் என தகவல்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌹

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்,                                                        மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459