போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி - 26.06.2025 - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/06/2025

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி - 26.06.2025

 அனைத்து வகை பள்ளிகளிலும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி இன்று எடுக்க வேண்டும்.

உறுதிமொழி 

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் . நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்.

 மேலும் எனது குடும்பத்தினரையும் , நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். 


போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.


 போதைப் பொருட்களின் உற்பத்தி , நுகர்வு , பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன் , மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459