7வது மாநில மாநாடு மூன்றாம் நாளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணி! : மாநாட்டில் 28 தீர்மானங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/05/2025

7வது மாநில மாநாடு மூன்றாம் நாளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணி! : மாநாட்டில் 28 தீர்மானங்கள்

 


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


*மாநில அமைப்பு*


*************************


*ஊடகச் செய்தி*


*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 06/2025*

*நாள்: 03.05.2025*



************************

*திண்டுக்கலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7வது மாநில மாநாடு மூன்றாம் நாளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி!மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*


*************************

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7வது மாநில மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று (03.05.2025) L.கோபாலகிருஷ்ணன் மா.ச.முனுசாமி நினைவு வளாகத்தில் கே.ஏ.தேவராஜன் செ.நடேசன் அரங்கில் பெண்ணாசிரியர்களுக்கான மாநாடு தொடங்கியது.*



*இம்மாநாட்டிற்கு STFI அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் கு.சுதா மற்றும் மாநிலத் துணைத்தலைவர் சி.ஜி.பிரசன்னா ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயலாளர் சே.பேச்சியம்மாள் வரவேற்புரையாற்றினார். சமூக மாற்றமும் கல்வி அமைப்பும் என்ற தலைப்பில் முனைவர்.ப.சுசீந்திரா கருத்துரையாற்றினார். மாநாட்டு அறிக்கையை மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை சமர்ப்பித்தார். பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் அ.கிருஷ்ணவேனி நன்றி கூறினார்.*


*அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் திண்டுக்கலில் ஆர்.எம்.காலனி 80 அடி சாலையில் மாநிலத் துணைத்தலைவர்கள் மா.ஆரோக்கியராஜ், பெ.செ.அமர்நாத் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் அ.மாயவன் Ex.MLC தொடக்கி வைத்தார்.*



*பேரணி முடிவில் நாகா-லட்சுமி தியேட்டர் வளாகம் நா.நாகப்பன் நினைவுத்திடலில் பொதுக்கூட்டம் சக்தி கலைக்குழு மற்றும் புதுகை பூபாளம் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை தாங்கினார். STFI பொதுக்குழு உறுப்பினர் ச.டேவிட் ராஜன் முன்னிலை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் தே.முருகன் வரவேற்புரையாற்றினார். STFI அகில இந்தியச்செயலாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான அ.சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.பாலபாரதி சிறப்புரையாற்றினார்.பொதுச்செயலாளர் ச.மயில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். இறுதியில் மாநிலப் பொருளாளர் தா.கணேசன் நன்றியுரை கூறினார்.*


*இப்படிக்கு*

*ச.மயில்*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459