கற்றல், கற்பித்தல் பாதிப்பு
"அரசின் விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு வழங்குவது, பஸ் பயண அட்டை வழங்குவது, வங்கிக்கணக்கு துவக்குவது, கல்வி உதவித் தொகை பதிவு பணி மேற்கொள்வது, நுாலக பராமரிப்பு, இணைய வழிப் பதிவு கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆசிரியர்களே மேற்கொள்வதால், கற்றல், கற்பித்தல் செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படுகிறது"
ஆசிரியர்கள் பணிச்சுமையை குறைக்க 'எமிஸ்' இணையத்தின் வாயிலாக விவரங்களை பதிவேற்றும் பணிக்கு, பிரத்யேக பணி யாளர் நியமிக்கப்பட்டும்,
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
ஆசிரியர்கள் மீதே அப் பணி சுமத்தப்படுகிறது" என்ற குற்றச்சாட்டை ஆசிரியர்கள் முன்வைக் கின்றனர்.தமிழ்நாடு விடியல் ஆசி ரியர் முன்னேற்றச் சங்க மாநில தலைவர் சுந்தர மூர்த்தி நமது நிருபரிடம் கூறியதாவது:
'யுடிஸ்' எனப்படும் கல் விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு மற்றும் 'எமிஸ்' எனப் படும் சுல்வி மேலாண்மை தகவல் அமைப்பு ஆகிய வற்றில், வருகை பதிவு உள்ளிட்ட மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இப் பணி பெரும் நேர செலவி னத்தை ஏற்படுத்துவதால், சுற்றல் மற்றும் கற்பித்தல் பணி பாதிக்கிறது' என்ற ஆசிரியர்களின் ஆதங்கம் கல்வித்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
"எடுபிடி' வேலை
இதையடுத்து, இப்பணிகளை மேற்கொள்ள, பள்ளிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு 'எமிஸ்' இணையத்தை சரிவர கையாள தெரிவதில்லை; விவரங்களை பதிவேற்றவும் திணறுகின்றனர். அவர்களை 'எடுபிடி வேலைக்கு பயன்படுத்தும் சூழலையும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. அப்பணிகள் மீண்டும் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது.மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், யுடிஸ் மற் றும் 'எமிஸ்' பதிவுகளை ' ஆசிரியர்கள் தான் மேற் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர்; இதனால், மாணவர்களின் கல்வி நலன் முற்றிலும் பாதிக்கப் படுகிறது.
காவலர் பணி, ஏவலர் பணி என, எதற்கும் அரசுப்பள்ளிகளில் ஆட்கள் இல்லை. அரசு பள்ளிகள் வறுமை யின் அடையாளமல்ல;
பெருமையின் அடையா வம்' எனக்கூறும் கல்வித் துறை அமைச்சர், எமிஸ் பணி உட்பட பிற பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்களை பணியமர்த்தி, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை மட்டும் வழங்கி, கற்பித்தல் பணி சிறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், பெருமளவிலான காலி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
திறன் வாய்ந்தவர் தேவை
'எமிஸ்' மேற்கொள்ள பணியை திறன் வாய்ந்தவர்களை பணிய மர்த்த வேண்டும்; அதற் குரிய பயிற்சிகளை அவர்க ளுக்கு வழங்க வேண்டும். சத்துணவு பணிகளை யும் ஆசிரியர்களே மேற் பார்வை செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment