சரண் விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை முடக்கி வைத்திருப்பதையும், பழைய பென்ஷன் உட்பட சட்டசபை தேர்தலின்போது திமுக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததை கண்டித்து, தலைமைச் செயல் தலைமைச் செயலக ஊழி நேற்று மதியம் உணவு இடைவேளையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மிகக் குறுகிய நேரத்தில் செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் அதிகமானோர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் போராடிய போது, அந்த போராட்டங்களுக்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக முழு ஆதரவு அளித்தது. அதேபோல், 2021 சட்டசபை தேர்தலின்போது, பழைய பென்ஷன் திட்டம் உட்பட அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கையை நிறைவேற்றுவதாக தனது தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது. ஆனால்,
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகளை அரசு இதுவரை நிறைவேற்ற வில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் அரசை அணுகிய போதெல்லாம் மாநில நிதி நிலை சரியாகும் நிறைவேற்றுவதாக கூறி. அரசுத் தரப்பு சமாளித்து வருகிறது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவிப்பதில் அரசு ஊழியர் சங்கங்களின் இடையே இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முக்கியமான கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாததால், அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளிடையே நிலவி வந்த இருவிதமான நிலைப் பாட்டில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டது.திடீர் ஆவேசம்
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று - மதியம் உணவு இடை வேளை நேரத்தில், தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் கவிஞர் மாளிகை நுழைவுவாயில் முன்பாக நேற்று பகல் 1.45 மணி முதல் 2 மணிவரை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் 800க்கும் அதிகமானவர்கள் பங்கேற்று, அரசுக்கு எதிராக ஆவேசமாக கோஷங்களை எழுப்பினர்.
4 ஆண்டு ஏமாற்றம்
முன்னதாக நேற்று காலையில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் வெங்கடேசன், ஒவ்வொரு துறை அலுவலகத்துக்கும் சென்று உணவு இடைவேளையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அவர் பேசும்போது, ஆளும் திமுக அரசு 4 ஆண்டுகளை கடந்த பின்னும், சட்டசபை தேர்தலின்போது நமக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.2) முதல்வர் பல இடங்களில் சொன்னதை செய் வோம்... சொல்லாததையும் செய்வோம்' என்று பேசுகிறார். நம்மை பொறுத்தவரை சொல்லாததை செய்துள்ளார். அது என்னவென்றால்/கருணா நிதியால் வழங்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையைக்கூட இவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த ஆண்டுகளாக வழங்காமல் நம்மை வஞ்சித்து வருகின்றனர்.இதற்கு அர்த்தம். இனிமேல் உங்களுக்கு சரண் விடுப்பு சலுகை இல்லை என்பதாகத்தால் அர்த்தம் சட்டசபை கூட்டத்தொடரில், கடந்த 11ம் தேதி, தேர்தல் கால வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற மாட்டோம் என்று மட்டும்தான் நிதி அமைச்சர் சொல்ல வில்லை. அதைத்தவிர பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
TEACHERS NEWS |
ஆனால் தொடர்ச்சியாக பொங்கல் விடுமுறை வந்ததால் இன்று (24ம் தேதி) தேர்வு செய்துள்ளோம்.
இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இருந்த 4.50 லட்சம் காலிப்பணியிடங்கள் இன்றுவரை அப்படியே உள்ளது. எங்கே பார்த்தாலும் அவுட் சோர்ஸிங், தனியார் மயம், ஆலோசகர்கள் என்ற அடிப் படையில் உள்ளது நம்முடைய வாழ்வாதார கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்புகளை விடுவிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி நடை பெற உள்ள கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
2017ல் அன்றைய ஆட்சியாளர்கள் 7 வது சம்பள கமிஷனை அமல்படுத்த காலம் தாழ்த்திய போது,
நாம் எல்லாரும் ஒன்று பட்ட சக்தியாக களத்தில் இறங்கிப் போராடினோம். கோர்ட் வரை சென்று அந்த ஆட்சியாளர்களை நிர்பந்திக்க வைத்து, சம்பள மாற்றத்தை பெற்றோம். எனவே நாம் எல்லாரும் ஒன்றுபட்ட சக்தியாக இருந்தால் ஆளும் ஆட்சியாளர்கள் நம்மை வஞ்சிக்க முடியாது. நாம் எல்லாரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். இனிமேலும் எங்களை ஏமாற்ற முடியாது என்பதை காட்டிட வேண்டும்.
இவ்வாறு வெங்கடேசன் ஒவ்வொறு துறையாக பேசினார். அவர் அழைப்பை ஏற்று உணவு இடை வேளை ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டது.ஆளும் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment