அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்கள் தேர்வு: விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/01/2025

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்கள் தேர்வு: விண்ணப்பிக்கலாம்

1348281

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு ஜனவரி 31 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பாடவாரியான காலிப்பணியிடங்கள், அவற்றுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இந்தப் பணிகளுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459