அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் போதை தடுப்பு குழு அமைக்க வேண்டும்: தொழில்நுட்ப கல்வி ஆணையர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




20/09/2024

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் போதை தடுப்பு குழு அமைக்க வேண்டும்: தொழில்நுட்ப கல்வி ஆணையர் உத்தரவு

 அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் போதைப் பொருள் தடுப்பு குழு அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துமாறு தொழில்நுட்ப கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்க்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தபட்சம் 5 மாணவர்களை கொண்ட போதைப் பொருள் தடுப்பு குழு (Anti Drug Club) அமைக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.


அதன்படி, போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை செயல்படுத்தும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்களில் போதைப் பொருள் தடுப்பு குழு அமைக்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் 5 மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர், என்எஸ்எஸ் அல்லது என்சிசி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இடம்பெற வேண்டும். போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக இந்த குழு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459