அரசுப் பள்ளிக்கு 10 ஏக்கர் இடம் வழங்கிய ஆசிரியர் குடும்பம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேடயம் வழங்கி பாராட்டு - ஆசிரியர் மலர்

Latest

 




01/09/2024

அரசுப் பள்ளிக்கு 10 ஏக்கர் இடம் வழங்கிய ஆசிரியர் குடும்பம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேடயம் வழங்கி பாராட்டு

 




நேற்று (31.08.2024 சனிக்கிழமை) திருநெல்வேலியில்...தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும்
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்திய பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,தமிழக சட்டபேரவை சபாநாயகர் திரு.அப்பாவு , மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் அரசுப் பள்ளிகளுக்கு வளர்ச்சிக்கு உதவியவர்களை பாராட்டி சிறப்பிக்கப்பட்டது.இவ்விழாவில் ஆண்டு கோவில்பட்டி வ.உ.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு
10 ஏக்கர் நிலம் (இன்றைய சந்தை மதிப்பில் ரூபாய் 200 கோடி) 
நன்கொடையாகத் வழங்கிய
கொடை வள்ளல் தெய்வத்திரு பொட்டி நாயக்கர் அவர்களின் வழித்தோன்றலும் தற்போதைய 
நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டத் தலைவருமான
தோழர் சு.செல்வராஜ்
அவர்களுக்கு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்  மாண்புமிகு அப்பாவு அவர்களும்
பாராட்டுச் சான்றும் கேடயமும் கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.


 எழுத்தறிவித்தவன் இறைவன்  என்று  நமது முன்னோர்கள் கூறுவார்கள்.அதற்கேற்ப ஆசிரியர் தோழர் சு.செல்வராஜ் அவர்களது குடும்பத்தாரின் கொடைத் தன்மையைப் பெருமைபொங்க எண்ணிப் பாராட்டி  மக்கள் மகிழ்கிறனர். இதன்மூலம்  மாணவர்களும் கல்வி கற்று சமூகத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மை வளர்க்க வேண்டும் என்பதே ஆசிரியர் செல்வராஜ் அவர்களின் விருப்பமாக உள்ளது



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459