தமிழகத்தில் 2001 - 2002 மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளில் சேர்ந்து, தற்போது வரை அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்றும், அந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் வைத்துள்ள மாணவர்கள், எழுத விரும்பினால் இந்த சிறப்பு தேர்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக சிறப்புக் கட்டணமாக 5000 ரூபாயும், ஒவ்வொரு தாளுக்கும் தலா 225 ரூபாயை தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 25. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இந்தத் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் சிறப்புத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சிறப்புக் கட்டணமாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 18 ஆகும். இந்தத் தேர்வுக்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


/indian-express-tamil/media/media_files/EEPDXSnouHQzsc0AXe4s.jpg)
No comments:
Post a Comment