தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பணியிடம் உருவாக்குதல் - DSE செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

11/07/2024

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பணியிடம் உருவாக்குதல் - DSE செயல்முறைகள்!

 


IMG_20240711_124355

2017-18, 2018-19 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பணியிடம் உருவாக்குதல் - DSE செயல்முறைகள்!

DSE - Computer Teacher Post - Proceedings👇

Download here


தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க 08.07.24 நாளிட்ட கடிதத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் வழங்கக் கோரிக்கை பெறப்பட்டுள்ளது.


 2017-18 , 2018-19 , 2023-24 ஆகிய கல்வி ஆண்டுகளில் உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை . ஆனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு நடைபெற்று வருகிறது எனத் தெரிய வருகிறது.


 எனவே , மேற்கண்ட ஆண்டுகளில் தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினிப் பிரிவில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சார்பான விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட அளவில் இணை இயக்குநர் ( மேல்நிலைக்கல்வி ) அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு idhscose@tnschools.gov.in உடனடியாக அளிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459