நுழை , நட , ஓடு . பற - புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் - DSE Proceedings - ஆசிரியர் மலர்

Latest

01/06/2024

நுழை , நட , ஓடு . பற - புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் - DSE Proceedings

 


 IMG_20240601_155109

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை , நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

 முதல் கட்டமாக 53 புத்தகங்கள் வழங்கப்பட்டு , இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் அச்சிடப்பட்டு , அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன . மேலும் , இக்கல்வியாண்டில் அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன.


இப்புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது . அனைத்து வகை அரசுப் பள்ளிகள் , அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம்.


VI stories from teachers thro EMIS login - DSE Proceedings

 👇

Download here

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459