ஆசிரியர்களுக்கு இனி 'எமிஸ்' பணி கிடையாது??? - ஆசிரியர் மலர்

Latest

21/06/2024

ஆசிரியர்களுக்கு இனி 'எமிஸ்' பணி கிடையாது???

.com/

அரசு பள்ளிகளில், 'எமிஸ்' தளத்தில், மாணவர், ஆசிரியர் விபரம் பதிவேற்றுதல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.


அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 10க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.


இந்த உதவிகள் முறையாக மாணவர்களை சேருகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாணவர் விபரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு, அதில் நலத்திட்ட உதவிகளும் பதிவேற்றப்படுகின்றன.


அதேபோல, ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை மேற்கொள்வது, தற்காலிக மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர்களுக்கான எமிஸ் அடையாள எண் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளையும், ஆசிரியர்கள் தான் செய்து வந்தனர். இந்த பணிகளால்,

TEACHERS NEWS
மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியவில்லை. போட்டி தேர்வுகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கவும் முடியவில்லை என, ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.


இதையடுத்து, 8,000க் கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை, தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் நியமித்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.


பயிற்சி முடிந்ததும், பள்ளிகளின் ஆய்வக கண்காணிப்பு, எமிஸ் பணிகள், நலத்திட்ட உதவி விபரம் பதிவேற்றுதல், ஸ்மார்ட் வகுப்பறை, ஹைடெக் ஆய்வக கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு போன்றவற்றை தற்காலிக ஊழியர்கள் மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459