போலி தகவல்களை நம்ப வேண்டாம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

04/05/2024

போலி தகவல்களை நம்ப வேண்டாம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

 சென்னை, மே 3: கணினி ஆசி ரியர் பணியிடங்களை நிரப்பு வதாக வெளியான தகவல்கள் போலியானவை என்று பள் ளிக் கல்வித் துறை தெரிவித் தது.


தமிழகத்தில் 37,588 அர சுப் பள்ளிகள் இயங்கி வரு கின்றன. அங்கு ஏறத்தாழ 53 லட்சம் மாணவர்கள் பயில் கின்றனர்.


இந்த நிலையில், அரசுப் பள் ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங் கள் நடைபெறுவதாக குறுஞ் செய்தி ஒன்று சமூக வலைத எங்களில் பரவி வருகிறது.


அதில், 5 ஆண்டுகள் ஒப் பந்தம், தினமும் 3 மணி நேர வேலை,

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

மாத தொகுப்பூதியம் ரூ.10,000, கல்வித் தகுதிகள், தொடர்பு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்தத் தகவல் போலியானது என்றும், அதை நம்ப வேண் டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள் ளது.


இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:


கணினி ஆசிரியர் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் பள்ளிக் கல்வித்


துறையால் வெளியிடப்ப டவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் விளம்பரம் போலியானது.


இதுபோன்ற மோசடி விளம்பரங்களை நம்பி பட்ட தாரிகள் யாரும் ஏமாற வேண் டாம்.


பணி நியமன அறிவிப்பு களை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறையின் இலவச உதவி மைய எண்ணில் (14417) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459