ரயில்வே பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு காலியிடங்கள்:4460, Last date 14.5.2024 - ஆசிரியர் மலர்

Latest

04/05/2024

ரயில்வே பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு காலியிடங்கள்:4460, Last date 14.5.2024


 மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) “ரயில்வே சொத்துகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பிற்காக “இந்திய நாடாளுமன்றத்தால் ரயில்வே பாதுகாப்புப் படை சட்டம் 1957 இல் இயற்றப்பட்டது. நாட்டின் பாதுகாப்புப் படைகளில் ரயில்வே பாதுகாப்புப் படையும் ஒன்றாகும். ரயில்வேயின் சொத்துக்கள் மற்றும் பயணிகளை பாதுகாப்பது இதன் பணியாகும். ரயில்வே பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகள் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் பணியமர்த்தப்படுகிறார். ரயில்வே பாதுகாப்புப் படையில் கீழ்நிலை அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு, அந்தப் படையால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் நடத்தப்படுகிறது.

தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4660 உதவி காவல் ஆய்வாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மே 14 ஆம் தேதிக்குள்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: RPF 01/2024 & RPF 02/2024

பணி: Sub Inspector (SI)

காலியிடங்கள்: 452

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Constable

காலியிடங்கள்: 4208

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி


பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459