RTE 25% இட ஒதுக்கீடு: தனியாா் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் - ஆசிரியர் மலர்

Latest

15/04/2024

RTE 25% இட ஒதுக்கீடு: தனியாா் பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியாா் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு வருகிற 22-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. விண்ணப்பதாரா்கள் rte.tnschools.gov.in என்ற இணையதள வழியாகவோ, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வட்டார வளமைய அலுவலகங்களிலோ கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.


25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தனியாா் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459