அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

04/04/2024

அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு.

 


school-vehicles

தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.


ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.


அதாவது, கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு தினமும் சுவாச பரிசோதனை செய்த பிறகே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி வாகனங்களில் மாணவியர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரையடுத்து தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏப்.5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459