தற்காலிக ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

02/04/2024

தற்காலிக ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய உத்தரவு

 தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் நிகழாண்டில் பள்ளி இறுதிநாள் வரை பணியாற்ற வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 


பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் நகராட்சி, அரசு உயா், மேல்நிலை பள்ளிகளில் 2023- 2024-ஆம் கல்வியாண்டில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் மற்றும் முதுநிலை ஆசிரியா்காலிப் பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயா்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலமாக தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் உயா்நிலை , மேல்நிலை பள்ளிகளில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியா்கள் மகப்பேறு விடுப்பில் சென்ால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா்கள் நியமனம் செய்து சாா்ந்த பள்ளி தலைமை ஆசிரியா் மூலம் ஆணை வழங்கப்பட்டது. 


பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி, பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக இடைநிலை,

TEACHERS NEWS
பட்டதாரி ஆசிரியா்கள் நிகழ் கல்வியாண்டில் பள்ளி இறுதி வேலை நாள் வரை பணியாற்ற வேண்டும்.


 அதேவேளையில் முதுநிலை தற்காலிக ஆசிரியா்களுக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இறுதி வேலை நாளாக கருதப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


IMG-20240402-WA0010

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459