மே 6-ல் உள்ளூர் விடுமுறை! - ஆசிரியர் மலர்

Latest

26/04/2024

மே 6-ல் உள்ளூர் விடுமுறை!

  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயில் தேரோட்டத்தையொட்டி மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மே. 6) காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.


இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 29 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459