நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம் - ஆசிரியர் மலர்

Latest

09/04/2024

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்

 1228206

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது.


இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்குமாறு பல்வேறு மாணவர்கள் தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை ஏற்று,நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தேர்வுக்கு ஏப்ரல் 9 மற்றும் 10-ம் தேதி(இன்றும், நாளையும்) மாணவர்கள் ஆன்லைனில் (www.nta.ac.in) விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459