பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு - ஆசிரியர் மலர்

Latest

14/04/2024

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

1230647

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியமாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.


இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இதில் சுமார் 40ஆயிரத்துக்கும் மேலான முதுநிலைஆசிரியர்கள் ஈடுபட்டனர். தற்போதுவிடைத்தாள் திருத்துதல் முடிவுற்றதை அடுத்து மாணவர்களின் மதிப்பெண்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நாளை (ஏப்.15) முதல் தொடங்கும்.


அதைத்தொடர்ந்து மாணவர் மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்டவேலைகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6-ல்வெளியிடப்பட உள்ளது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459