தேர்தல் பணி - ஆசிரியர்கள் , அலுவலர்களுக்கு 10 கி.மீ. துாரத்தில் பணி , அடிப்படை வசதி தேர்தல் கமிஷன் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/04/2024

தேர்தல் பணி - ஆசிரியர்கள் , அலுவலர்களுக்கு 10 கி.மீ. துாரத்தில் பணி , அடிப்படை வசதி தேர்தல் கமிஷன் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை

 தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட் டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் வெளியிட் டுள்ள அறிக்கை:


தமிழகத்தில் தேர்தல் நடக்கும் போதெல்லாம். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழி யர்கள் பலர் இறக்கின்றனர். இதற்கு காரணம் ஆசிரியர் கள் மற்றும் அரசு ஊழியர் கள் தேர்தல் பணிக்காக சுமார் 100 கி.மீ கடந்து பணி அமர்த்தப்படுவதுதான்.


தேர்தல் பணிக்காக மொத்தம் 5 நாட்கள் பணி புரிய வேண்டும். இதில் பயிற்சியும் அடங்கும். இதில் மூன்று நாட்கள் நடத்தும் பயிற்சியைகூட அருகாமையில் வைப்ப தில்லை.


சுமார் 1,500 ஆசிரியர் களை பயிற்சிக்கு வரவ ழைத்து, 50 பேர் வீதம் ஒரே அறை ஒதுக்கப்படு கிறது. மேலும் மின்விசிறி, ஜெயக்குமார் கழிவறை, குடிநீர் உள் ளிட்ட எந்த ஒரு அடிப் படை வசதியும் செய்து கொடுப்பதில்லை. குறிப் பாக பெண்களுக்கு எந்த ஏற்பாடும் செய்வதில்லை.


ஆனால் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு வர வில்லை என்றால் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கலெக்டர் ஆகி யோர் சம்பந்தப்பட்ட ஆசி ரியர்களை சஸ்பெண்ட் செய்து விடுவதாக கூறு கின்றனர்.


நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் பணியில் ஈடுபட்ட நாமக்கல்லை சேர்ந்த ஆசிரியர், சேலத்தை சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் மற்றும் ஒரு போலீசார் என 5 பேர் உயிரிழந்துள் ளனர்.


ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சொல்ல முடியாத துய ரத்தை அனுபவிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண் டும். எனவே இனிவரும் தேர்தலில் ஆசிரியர்களுக்கு 10 கி.மீ தூரத்துக்குள் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆசிரியர்கள் பயணம் செய்ய உரிய வாகன வச திகள், தேர்தல் பணியாற் றும் இடத்தில்


அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தேவையற்ற படிவங்கள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும்.

ஆசிரியர்கள் பயணம் செய்ய உரிய வாகன வச திகள், தேர்தல் பணியாற் றும் இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தேவையற்ற படிவங்கள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும்.


தேர்தல் பணியின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா

TEACHERS NEWS
ரூ. ஒரு கோடி நிதியை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

IMG-20240423-WA0026




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459