school morning prayer activities 25.3.24 - ஆசிரியர் மலர்

Latest

24/03/2024

school morning prayer activities 25.3.24

 




பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் 25.3.2024

திருக்குறள்: 


பால்: பொருட்பால். 
இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

விளக்கம்:

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

பழமொழி :

Sadness and gladness succeed eash other

வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

 1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.     
                                            
  2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

புத்தகம் இல்லாத வீடும்,

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

ஜன்னல் இல்லாத வீடும் ஒன்றே .
- சிங்சௌ .

பொது அறிவு : 

1. உலோகங்களின் இராஜா என்றழைக்கப்படும் உலோகம் எது? 

இரும்பு. 


2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது? பிளாட்டினம்."}" style="color: black; font-family: Arial;">2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது? 

பிளாட்டினம்.

English words & meanings :

 Yew - an evergreen tree; பசுமை மாறா.
Yore - long ago; வெகு காலத்திற்கு முன்பு.

ஆரோக்ய வாழ்வு : 

புளித்த கீரை :புளித்த கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதால், இது இருதய வாஸ்குலர் நோய்களை தடுக்கிறது. புளித்த கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.

நீதிக்கதை

 புதையல் ரகசியம்

ஒரு ஊரில் ஒரு வயதான விவசாயி இருந்தார். அவரது மகன்களோ விவசாயத்தில் ஆர்வமின்றி இருந்தனர். தனக்குப் பிறகு அவர்கள் சம்பாத்தியம் இல்லாமல் துன்பப் படுவார்களே என அவர் கவலைப்பட்டார்.

ஒரு தந்திரம் வகுத்தார். இறக்கும் தருவாயில் இருந்த போது அவர்களை அழைத்தார். வயலில் தான் மிகம் பெரும் புதையலைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.

அவர் இறந்த பின்னர் அவர்கள் மண்வெட்டி கடப்பாரைகளை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று ஆழமாகத் தோண்டினர்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

அவர்களுக்குப் புதையல் கிடைக்க வில்லை. ஆனால் மண் நன்கு பண்படுத்தப்பட்டதால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல பணவரவு அவர்களுக்கு வந்தது.


நீதி: முன்னேறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை.

இன்றைய செய்திகள்

25.03.2024

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 'நீட்' தேர்வு பயிற்சி இன்று முதல் தொடங்குகிறது.

*பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வை முடித்த மாணவர்கள் 100 மரக்கன்றுகள் நட்டனர்.

*தேர்தல் பறக்கும் படை: எட்டு நாள் சோதனையில் ரூபாய் 11 1/2 கோடி பிடிபட்டது மற்றும் ரூபாய் 38 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கியது.

*ஒகேனக்கலில் நீர் வரத்து 200 கன அடியாக நீடிப்பு.

Today's Headlines

*NEET practice for government school students starts today.

 *Students who completed thei

TEACHERS NEWS
r Plus 2 examination at Perunthurai Government Boys Higher Secondary School planted 100 saplings.

 * Rs 11 1/2 crore  and drugs worth Rs 38 lakh seized in eight-day raid by Election Flying Squad.

 *Water flow in Okanakkal is increased to 200 cubic feet.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459