இருவிதமான உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் - ஆசிரியர் மலர்

Latest

29/03/2024

இருவிதமான உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம்

 பொள்ளாச்சி தொகுதி யில் தேர்தல் பணியில் ஈடு பட உள்ள ஆசிரியர்கள், பொள்ளாச்சியில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்காததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், அதிர்ச்சி அடைந் தனர்.


கோவை மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்க ளுக்கு, சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பொள் ளாச்சி லோக்சபா தொகு தியில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள், பொள்ளாச் சியில் உள்ள மகாலிங்கம் கல்லுாரியில் நடந்த பயிற் சியில் பங்கேற்க, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி யான, கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டு, கடி தம் அனுப்பியிருக்கிறார்.


இவர்களே, உடுமலையில் உத்தரவிட்டு, திருப்பூர் கலெக்டர் கடி தம் அனுப்பியிருக்கிறார். பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், தங்க ளின் வசதிக்கேற்ப பங்கேற் றுள்ளனர். உடுமலைக்கு சென்றவர்கள், பொள்ளாச் சியில் நடந்த பயிற்சியில் கோவை மாவட்டத்தில் பங்கேற்கவில்லை.


இதில், பொள்ளாச் சியில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கா தவர்களுக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்


அதிர்ச்சி அடைந்த ஆசி ரியர்கள், கோவை கலெக் டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.  இவர்களிடம் பயிற்சியில் பங்கேற்காததற்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்கு, நடந்த பயிற்சியில் பங்கேற்றோம்' .

என, ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதையே எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுங்கள் என அறிவுறுத்தியதை தொடர்ந்து,

TEACHERS NEWS
ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்துச் சென்றனர்.


ஆசிரியர்கள் கூறுகையில், சிலர் 'கோவை மாவட்ட தேர்தல் பிரி வில் இருந்து, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்தும் இரு கடிதங்கள் வந்தன. நாங்கள் உடுமலையில் நடந்த பயிற்சியில் பங்கேற்றோம்


பொள்ளாச்சியில் ஏன் பங்கேற்கவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர்.


ஒரே நபருக்கு இரு மாவட்ட நிர்வாகங்கள் கடிதம் அனுப்பியது தவறு. அதை சரி செய்யாமல், எங்களை அலைக்கழித்து விளக்கம் கேட்கின்றனர்'


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459