ஆந்திராவில் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் : மெய்மறந்த ஆசிரியர் - ஆசிரியர் மலர்

Latest

25/03/2024

ஆந்திராவில் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள் : மெய்மறந்த ஆசிரியர்

2030255-dance

ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.

ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார்.


ஆந்திராவில் உள்ள அரசு பள்ளியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியை வேலை செய்து வருகிறார்.


நேற்று முன்தினம் மாணவர்கள் ஆசிரியையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்தனர்.


காலை ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.


பின்னர் வகுப்பறையில் பிறந்தநாள் கேக் வெட்டி ஆசிரியைக்கு ஊட்டினர். தங்களது செல்போனில் இந்தி படத்தில் இருந்து குத்துபாட்டை ஒலி பரப்பினர்.


அப்போது ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார். மாணவர் ஒருவர் ஆசிரியையின் சேலை முந்தானையை எடுத்து அவரது முகத்தை மூடியபடி நடனம் ஆடினார்.


இந்த காட்சிகளை வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.


ஆசிரியையின் நடனத்தை பார்த்த பலரும் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது தவறில்லை.


ஆனால் வகுப்பறையில் நடனம் ஆடியதால் அவர் ஆசிரியையாக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும், ஆசிரியை வகுப்பறையில் நடனம் ஆடியது தவறில்லை எனவும் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459