இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்? - மாநில தலைமை தகவல் - ஆசிரியர் மலர்

Latest

08/03/2024

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்? - மாநில தலைமை தகவல்

 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்


19 நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக  ஒத்திவைப்பு.


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டெல்லி சென்றிருக்கிறார். அங்கிருந்து போராட்ட களத்திலிருக்கும் மாநில தலைமை ஜே.ராபர்ட் அவர்களுடன்  (இடைநிலை ஆசிரியர்களுடன்) தொலைபேசியில் பேசிய பின்பு மதிப்புமிகு பள்ளிகல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  போராட்டத்திற்கான சுமுகமான தீர்வு மிக விரைவில் எட்டப்படும் என்பதால் தற்காலிகமாக 19 நாளாக நடைபெற்ற போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.


போராட்ட நாட்கள் அனைத்தும் தகுதியான விடுப்பாக முறைப்படுத்தப்படும்.


மற்ற அனைத்து விபரங்களும் விரைவில் நடைபெறவுள்ள  மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.


நன்றி..

ஜே.ராபர்ட்

SSTA மாநில தலைமை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459