மாவட்ட /வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம் செய்தல்- அறிவுரைகள் வழங்குதல் - ITK அலுவலரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




07/02/2024

மாவட்ட /வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம் செய்தல்- அறிவுரைகள் வழங்குதல் - ITK அலுவலரின் செயல்முறைகள்

IMG_20240207_190022

இல்லம் தேடிக் கல்விபணிகளை மேற்கொள்ளும் மாவட்டம் / வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உரிய காரணத்துடன் அத்தகவல்களை எழுத்து பூர்வமாக மாநில அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும்.
 அவ்விடத்தில் , இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நன்கு ஈடுபாடுள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு புதிய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும்.

 இவ்வாறு இல்லம் தேடிக் கல்வி பணியில் ஆசிரியர்களை மாவட்ட / வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் அல்லது விடுப்பு செய்வதற்கான ஆணை உரிய வழியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமிருந்து மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டும்.

Proceedings - pdf Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459