பள்ளியில் பழுதான கட்டடம்: பட்டியல் தயாரிக்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

02/02/2024

பள்ளியில் பழுதான கட்டடம்: பட்டியல் தயாரிக்க உத்தரவு

 ஒவ்வொரு ஆண்டும், அரசுப்பள்ளிகளுக்கு பராமரிப்பு செலவினங்களுக்கு நிதி வழங்குவதோடு, கூடுதல் வகுப்பறை, கழிப்பிடம், சுற்றுச்சுவர் கட்ட மத்திய, மாநில அரசுகள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.வரும், 2024 - 25ம் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதற்கான செலவினங்களை பட்டியலிட ஏதுவாக, தற்போது பள்ளிகளில் உள்ள பழுதான கட்டடங்கள், இடித்து அகற்றப்பட வேண்டியவை குறித்த விபரங்களை தலைமை ஆசிரியர்கள் பட்டியலிட்டு, பள்ளிகல்வித்துறையின் செயலியில் விபரங்களை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், தலைமை ஆசிரியர்கள் வழங்கிய விபரங்களை கொண்டு, இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் உறுதித்தன்மை, ஆயுட்காலம் குறித்து வல்லுநர் குழு ஆய்வு நடத்தப்படும். அதன் பின் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிய பணி குறித்து முடிவெடுக்கப்படும்.

 உறுதித்தன்மையுடன் கட்டடங்கள் இருந்தால், தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க ஒப்புதல் வழங்கப்படும், என்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459