அரசு ஊழியர், ஆசிரியர்கள் விடுப்பு போராட்டம் - ஆசிரியர் மலர்

Latest

31/01/2024

அரசு ஊழியர், ஆசிரியர்கள் விடுப்பு போராட்டம்


 பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றும், நாளையும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர். 2003 ஏப்.,1க்கு பின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது.


 இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராடி வருகின்றனர்.


இதைத் தொடர்ந்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் இன்றும் நாளையும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.


IMG-20240131-WA0006

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459