ஆசிரியர் தேர்வுக்கான(UG TRB EXAM) போட்டித் தேர்வுக்கான ஆர்வம் குறைந்தது - ஆசிரியர் மலர்

Latest

23/12/2023

ஆசிரியர் தேர்வுக்கான(UG TRB EXAM) போட்டித் தேர்வுக்கான ஆர்வம் குறைந்தது

 அரசு பள்ளி பட்ட தாரி ஆசிரியர் பதவியில், 2,582 காலியிடத்துக்கு, 41,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஒரு காலியிடத்துக்கு, 16 பேர் மட்டுமே போட்டியி டும் நிலை உள்ளது.


அரசு பள்ளிகளில் காலி யாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 2,582 காலியிடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியானது.

பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களில், தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப் பட்டது. இதற்கு, 1.5 லட் சம் பேர் வரை விண்ணப் பித்தனர்.


அதேபோல், ஆசிரியர் வேலை பார்க்க, பி.எட்., முடித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். இதை கணக்கிட்டால், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

இந்நிலையில் இளைய தலை முறையினரும், ஆசிரியர் பணிக்கு ஆர்வம் காட்டு வது குறைவாக உள்ளது.


கடந்தகாலங்களில், தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே வைத்து, நியம னங்கள் மேற்கொள்ளப்பட் டன. தற்போது தி.மு.க., அரசுதான் போட்டி தேர்வை புதிதாக அறிவித்து, அதை பிடிவாதமாக நடைமுறைப் படுத்துகிறது.


TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459