அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற / பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ( ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும் ) இணைப்பு 1 இல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் , உயர் கல்வி பயில்வதற்கு கல்வி கட்டணத் தொகை ( Tutition fees ) தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை ( Tution Fees ) அல்லது ரூ .50.000 / - இதில் எது குறைவோ , அத்தொகை மற்றும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத் தொகை ( Tution Fee ) அல்லது 15,000 / - இதில் எது குறைவோ அத்தொகை தேசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து உயர்கல்விக் கட்டணத் தொகையை வழங்கப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
எனவே , தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து , தொழில் நுட்பக் கல்வி , பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2023- 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ள பார்வையில் கண்ட அரசாணை நகல் மற்றும் ( திருத்திய ) படிவம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்வு - விண்ணப்பங்களை 31.01.2024க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: அரசாணை & படிவம்!👇
DSE - Tr's Children Scholarship - Download here
No comments:
Post a Comment