Income tax return வருமானவரி தாக்கல் ரிட்டர்ன் குறித்த புதிய அப்டேட் - ஆசிரியர் மலர்

Latest

13/12/2023

Income tax return வருமானவரி தாக்கல் ரிட்டர்ன் குறித்த புதிய அப்டேட்

 


வருமான வரி தாக்கல் ரிட்டர்ன் குறித்த புதிய தகவல்கள் வருமான வரித்துறை மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி ரிட்டர்ன்:

ஆண்டுதோறும் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட அளவை விட அதிகமான வருவாய் ஈட்டும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில வணிக காரணங்களுக்காக பதிவு செய்துள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு தொகையை விட குறைவான வருவாய் ஈட்டும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்துவிட்டு, அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வருமான வரி ரிட்டர்ன் அல்லது ரீபண்ட் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில், வருமானவரித்துறையானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்ப காரணங்களால் வருமான வரி ரிட்டர்ன் நிலுவையில் உள்ளவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31, 2024ம் தேதிக்குள் வரி செலுத்துவோர் கணக்கில் உள்ள நிலுவைத் தொகைகளை வழங்க உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பணத்தை திரும்ப செலுத்துவதற்கு உரிய நபர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும், வருமானவரி துறையின் கணக்கீடுகளுடன் வரி செலுத்துவோர் செய்த கணக்கீடுகள் பொருந்தினால் மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக 2017 -18, 2018 -19 மற்றும் 2019 – 20 நிதியாண்டுகளுக்கான வருமான வரி ரிட்டர்ன் முதலில் செயல்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு வழக்குகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459