பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில், உள்ளாட்சி, அரசு அமைப்புகளுக்காக எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது : ஐகோர்ட் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

17/12/2023

பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில், உள்ளாட்சி, அரசு அமைப்புகளுக்காக எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது : ஐகோர்ட் உத்தரவு!

Chennai_High_Court

பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில், உள்ளாட்சி, அரசு அமைப்புகளுக்காக எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என்று ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். விருத்தாசலம் வண்ணான்குடிக்காடு கிராமத்தில் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 715 சதுர மீட்டர் நிலத்தில் 103.55 சதுர மீட்டர் பரப்பில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்றும் ஊராட்சி அலுவலகம்


சிதிலமடைந்துள்ளதால் 202 சதுர மீட்டர் பரப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மீதமுள்ள நிலம் பள்ளிக்கு விளையாட்டு மைதானமாக பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதத்தை முன்வைத்தது. தமிழக அரசின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அரசு அமைப்புகளின் கட்டுமானங்கள் கூடாது. வண்ணான்குடிக்காடு கிராமத்தில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. பள்ளிக்கு ஒதுக்கிய நிலத்தில் மைதானம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அரசின் கொள்கைப்படி ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்ச நிலம் ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சி அலுவலகத்தால் பள்ளி மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,”இவ்வாறு உத்தரவு பிறப்பித்தனர்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459