தமிழகத்தில் அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு ? - ஆசிரியர் மலர்

Latest

05/12/2023

தமிழகத்தில் அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு ?

fa8d4b5c44c87a15a6687b6449b271a2

தமிழகத்தில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என்றும், இதற்காக இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் 22ஆம் தேதி வரை 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது.


மேலும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் அட்டவணையை பின்பற்றி மட்டுமே தேர்வுகளை நடத்த வேண்டும். அதற்கு முன்கூட்டி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வினாத்தாள்களை பாதுகாப்புடன் ஆன்லைன் வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு நாளில் மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், மிக்ஜாம் புயல் - கனமழை எதிரொலியாக அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.


11,12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்வு தேதி அடுத்த வாரத்திற்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. 

தகவல் மட்டுமே...

அதிகாரப்பூர்வ செய்தி வரும் வரை காத்திருக்கவும்....

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459