பள்ளி மாணவ / மாணவிகளுக்காக சிறிய சமூக சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/12/2023

பள்ளி மாணவ / மாணவிகளுக்காக சிறிய சமூக சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி

 


சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் அவர்களின் பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் ஊராட்சி ஒன்றிய கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலை பள்ளிகளில் கழிவவறை கட்டும் பணிகளை செயல்படுத்த தூய்மை பாரத இயக்கம் ( ஊ . ) திட்டத்தின் கீழ் 70 % { SBM ) மற்றும் 30 % 15 - th CFC நிதிகளை ஒருங்கிணைத்து பள்ளி மாணவ / மாணவிகளுக்காக சிறிய சமூக சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


எனவே , ஊராட்சி ஒன்றிய கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் / மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் புதிதாக தேவைப்படும் கழிவறைகள் விபரத்தினை 12122023 தேதிக்குள் sbmnellai2@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459