பள்ளிகளில் துாய்மை பணி - தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

12/12/2023

பள்ளிகளில் துாய்மை பணி - தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

 STUDENTS

கொரட்டூர் மாநகராட்சி பள்ளி மொட்டை மாடியில் ஆபத்தை உணராமல் குடிநீர் தொட்டியை பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் சாவடி தெருவில் மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மொட்டை மாடியில் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக மூடி இருந்த பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளியின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சீருடையுடன் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். 


மேலும் ஆபத்தை உணராமல் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி மீது நின்றபடி மாணவர்கள் தொட்டிக்குள் இருக்கும் அசுத்த நீரை பக்கெட் மூலம் வெளியேற்றி வந்தனர். இதை சாலையில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து பள்ளி மாணவர்களிடம் கேட்டார். 


அதற்கு அந்த சிறுவர்களோ தலைமை ஆசிரியர் தான் சுத்தம் செய்ய சொன்னார் என்று உரக்கச் சொல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.


அதில், 'பள்ளிகளில் துாய்மை பணிகள், சீரமைப்பு பணிகள் ஆகியவற்றில், மாணவ - மாணவியரை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக்கூடாது.


'அவ்வாறு புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459