மாநில முன்னுரிமை அரசாணை 243 , தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளும், அரசாணையின் நிறைகளும் குறைகளும் - ஆசிரியர் மலர்

Latest

29/12/2023

மாநில முன்னுரிமை அரசாணை 243 , தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளும், அரசாணையின் நிறைகளும் குறைகளும்

 மாநில முன்னுரிமை அரசாணை 243 , தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளும், அரசாணையின் நிறைகளும் குறைகளும் 

* அரசாணை எண் 12 ல் Head master / Headmistress of middle Schools - By Promotion from class II and Category 1 of Class III of the Service in Combined Seniority என்ற விதி ரத்து செய்யப்படுகிறது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் Uதவி உயர்வு  பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுப்பு முன்னுரிமை Uட்டியல் படி வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது .

* By the Promotion from the Categories in Class Il என்ற புதிய அமெண்ட்மென்ட் படி

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 


* பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு  தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்  மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விதி ரத்து செய்யப்படுகிறது . By Promotion from the eligible Persons in Category 1 of Class III என்ற விதியின் படி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும் .இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக இனி பதவி உயர்வு பெற முடியாது .


* For the Purpose of appointment Category 1 of Class 1 State Shall be a unit என்ற விதியின் படி வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு மட்டுமே மாநில சீனியாரிட்டி முறையில் நியமனம் , மாறுதல் நடைபெற்றது .

For the Purpose of appointment to any of the Categories in the Service the state Shall be Unit என்ற புதிய அமெண்ட்மன்ட் படி  மாநில முன்னுரிமை படியே அனைத்து பதவி உயர்வுகளும் ,மாறுதலும் நடைபெறும் . புதிய விதியின் படி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்திற்கு , வேறு மாவட்டத்திற்கு பதவி உயர்வு பெற முடியும். 


* புதிய அரசாணையில் நீதிமன்ற தீர்ப்புகளின் படி மாநில சீனியாரிட்டி வழங்கப்பட காரணம் என்று கூறப்பட்டுள்ளது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக பல முரண்பட்ட தீர்ப்புகள் இருந்தாலும் / ஒட்டகம் ஆக்கிரமித்த கதையை / முன்னுதாரணமாக கூரிய தீர்ப்பில் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட முடியாது என்ற விரிவான தீர்ப்பை அரசாணையில் கவனித்தில் கொள்ளப்படவில்லை. 


* புதிய விதியில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நகராட்சி பற்றி குறிப்பிடாத நிலையில் State Shall be unit என்பதனால் மற்றவர்களும் பதவி உயர்வு பெற முடியுமா ? மாறுதல் பெற முடியுமா ?

*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்களை நீண்ட காலம் புறக்கணித்ததின் விளைவு புதிய விதி .. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நீதிமன்றத்தை நாடினால் எப்போது செயல்பாட்டிற்கு வரும் ?மாநில சீனியாரிட்டி முறையின் படி 31.12.2023 அன்றைய தேதியில் யாரையும் பணி இறக்கம் செய்ய கூடாது என்ற விதியின் படி இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இளையவர் , மூத்தவர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை விட அதிக முன்னுரிமை பெறுகிறார்..

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459