டிச.23 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆசிரியர் மலர்

Latest

19/12/2023

டிச.23 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

 newproject16copy3-1700572671-1702957807

காரைக்கால்: திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை டிசம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் கூட நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


சனி பெயர்ச்சி நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் , பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்டம் மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதே போல காரைக்காலில் நாளை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையாக கணக்கிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி பெயர்ச்சி நிகழ்ந்து ஒரு மாதம் வரைக்கும் திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459