ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/12/2023

ஜாக்டோ ஜியோ - இன்றைய ( 14.12.2023 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

.com/

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: 14.12.2023

      💥 15 லட்சம் ஆசிரியர்கள்  அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில்  நடைபெற்றது.

        💥இன்றைய கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு வி.எஸ்.முத்துராமசாமி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு அன்பரசு,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் திரு சுரேஷ் ஆகிய மூன்று சங்க பொறுப்பாளர்கள் தலைமைதாங்கினர்.

        💥இன்றைய கூட்ட முடிவில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது .

   ♦️(1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை  நிறைவேற்ற  28.12.2023  வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல்.

♦️(2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.


  💥

TEACHERS NEWS
கோரிக்கைகள்:

 🔥CPS திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

🔥இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்

🔥சரண் விடுப்பு  ஊதியம், ஊக்க  ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

🔥காலிப்  பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும்.

🔥உட்பட கோரிக்கைகள்...

    💥இன்றைய கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள 25 சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 

கலந்து கொண்டனர்......


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459