8ம் வகுப்பு கல்வித் தகுதிக்கு... ரூ. 50 ஆயிரம் மேல் சம்பளம்... கிராம ஊராட்சியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - ஆசிரியர் மலர்

Latest

18/11/2023

8ம் வகுப்பு கல்வித் தகுதிக்கு... ரூ. 50 ஆயிரம் மேல் சம்பளம்... கிராம ஊராட்சியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்


காலிப்பணியிங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விழுப்புரம் மாவட்டத்திற்கான https://www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistants), ஜீப்பு ஓட்டுநர் (Jeep Driver) பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதிகள்: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி தகுதி வாய்ந்த - அதிகாரியிடமிருந்து செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்

கிராம ஊராட்சிகள்-வட்டாரம் வாரியாக காலியிடங்கள்

வ.எண்வட்டார/பஞ்சாயத்து யூனியன்கி.ஊ பட்டியல்
1.காணை01 அலுவலக உதவியாளர் , 01 ஜீப்பு ஓட்டுநர்
2.கோலியனூர்01 அலுவலக உதவியாளர், 1 ஜீப்பு ஓட்டுநர்
3.மரக்காணம்01 அலுவலக உதவியாளர்
4.முகையூர்02 அலுவலக உதவியாளர்
5.வானூர்02 அலுவலக உதவியாளர், 01 ஜீப்பு ஓட்டுநர்  
6.செஞ்சி03 அலுவலக உதவியாளர், 1 ஜீப்பு ஓட்டுநர்
7.கண்டமங்கலம்01 அலுவலக உதவியாளர்
8.மைலம்01 அலுவலக உதவியாளர்
9.மேல்மலையனூர்02 அலுவலக உதவியாளர்
10.ஒலக்கூர்02 அலுவலக உதவியாளர்
11.திருவெண்ணைநல்லூர்01 அலுவலக உதவியாளர்
12.விக்கிரவாண்டி02 அலுவலக உதவியாளர்

ஊதிய விவரம்:

ஜீப்பு ஓட்டுநர் : ரூ. 19500 - 62000/- மற்றும் இதர படிகள்

அலுவலக உதவியாளர்: ரூ. 15700 - 50000/- மற்றும் இதர படிகள்

விண்ணப்பிக்கும் முறை 

சுயமுகவரியுடன் கூடிய தபால்தலை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.  இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Job Notification Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459