தலைமையாசிரியர் கையேடு வெளியிடப்பட்டதன் நோக்கம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம். - ஆசிரியர் மலர்

Latest

 




30/10/2023

தலைமையாசிரியர் கையேடு வெளியிடப்பட்டதன் நோக்கம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்.

 IMG_20231030_175114


செய்திக்குறிப்பு :


தமிழக அரசின் சீரிய முயற்சியான அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்பு பயிற்சிகள் இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது . இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் அனுபவ பகிர்வை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொகுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு கையேட்டினை தயாரிக்க ஆணையிட்டு இருந்தார்கள். 

இதன் அடிப்படையில் 40 - க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 291 பக்க அளவில் தலைமை ஆசிரியர் கையேடு பள்ளிக்கல்வி இயக்ககத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இக்கையேட்டில் தலைமை ஆசிரியர்கள் , உதவி தலைமை ஆசிரியர்கள் , வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களின் பணிகள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கமாக உள்ளது.


மேலும் அலுவலக நடைமுறை பகுதியில் அலுவலகப் பணியாளர்களின் பணிகளும் , கடமைகளும்

TEACHERS NEWS
, பொறுப்புகளும் நிதி சார்ந்த நடைமுறை தகவல்களும் தரப்பட்டுள்ளன.


முதுகலை , பட்டதாரி , இடைநிலை மற்றும் சிறப்பு வழிகாட்டுதல்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது . மேலும் பள்ளிகளில் செஞ்சிலுவைச் சங்கம் , சாரணியர் இயக்கம் சுற்றுச்சூழல் மன்றம் , இலக்கிய மன்றம் , நூலக மன்றம் , வானவில் மன்றம் உள்ளிட்ட பல வகையான கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களும் ஆசிரியர்களுக்கான தரப்பட்டுள்ளன.


 இக்கையேட்டினை இன்று 30.10.2023 அன்று மதுரையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டு தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள் . தலைமை ஆசிரியர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழும். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரும் கலந்து கொண்டனர்.


Head Masters Guide 2023 - 2024 | Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459