போக்குவரத்துக்கழக ஓட்டுநா்,நடத்துநா் பணி: நவ.19-இல் எழுத்து தோ்வு - ஆசிரியர் மலர்

Latest

27/10/2023

போக்குவரத்துக்கழக ஓட்டுநா்,நடத்துநா் பணி: நவ.19-இல் எழுத்து தோ்வு

 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு நவ.19-ஆம் தேதி எழுத்து தோ்வு நடைபெறவுள்ளது.


இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுநா், நடத்துநா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இப்பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரா்களுக்கு தமிழகம் முழுவதும் 10 மையங்களில், நவ.19-ஆம் தேதி எழுத்துத்தோ்வு நடைபெறவுள்ளது.


இதற்கான அனுமதிச் சீட்டை நவ.13 முதல் ஜ்ஜ்ஜ்.ஹழ்ஹள்ன்க்ஷன்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வுக்கான அனுமதிச் சீட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459