15 ஆயிரம் பணியிடங்கள்:விரைவில் TNPSC GROUP 4 Exam அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

25/10/2023

15 ஆயிரம் பணியிடங்கள்:விரைவில் TNPSC GROUP 4 Exam அறிவிப்பு


 தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது.


விஏஓ,


இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், டைப் பிஸ்ட் ஸ்டெனோ டைப்பிஸ்ட் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசுப் பணி என்பதால், குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நி லையில், இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தீபாவளிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியது: லட்சக்கணக்கா னோர் எழுதும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித் துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம். இது, தேர்வர் களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். கடந்த முறை 7 ஆயிரம் பணியிடங்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு முடிந்த பிறகு 10 ஆயிரத்து 205ஆக அதிகரிக்கப்பட்டது.


'நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு அரசுப்பணிகளுக்கு 50 ஆயிரம் பேர் வரை தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர்' என்று முதல்வர் கூறியுள்ளார். இதில் டிஎன்பிஎஸ்சி மூலம் 30 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்ப உள்ளது.


கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் நடந்தது. 23 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். அதில் 18 லட்சம் பேர் வரை தேர்வு எழுதினர். இப்போது, கடந்த முறையை விட 5 ஆயிரம் இடங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், 'கட்ஆப்' மதிப்பெண் அதிகமாக இருக் கும். அதேநேரம், சொன்னபடி நவம்பரில் அறிவிப்பு வெளி யிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனென் றால், கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு ஜூலையில் நடந்து, கிட்டத்தட்ட 9 மாதம் கழித்துதான் இந்த ஆண்டு முடிவு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கவுன்சலிங் நடத்தி, கடந்த மாதம்தான் 10 ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறினர்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459