தமிழக கல்வித்துறையில் பரபரப்பு - ஆசிரியர் மலர்

Latest

01/09/2023

தமிழக கல்வித்துறையில் பரபரப்பு

எண்ணும் எழுத்தும் திட்டம்   BEd கல்லூரி மாணவர்களால் மதிப்பீடு செய்யும் திட்டம் ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற நிலை ஆசிரியர்களுக்கு உள்ளபடி மனவருத்தம் வந்துள்ளதாக கருதுகின்றனர்.

இதே போன்று சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் என  DEO அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 


 இச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறும்வரை இதனைக் கண்டித்து தொடர் போராட்டம் நடைபெறும் - TNPTF


-- -- -- --
வன்மையாகக் கண்டிக்கின்றோம்....


ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விதமாகப் போராடுவதற்கு அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்த விருதுநகர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களை TNPTF விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


Join Telegram


ஜனநாயக நாட்டில்  எவ்வித அனுமதியுமில்லாமல் கோரிக்கைகள் நிறைவேற ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களையே எதிர்த்துப் போராடும் காலத்தில்....


போராட அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணையிடும் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி)  செயல் வெட்கக்கேடு....


உடனே வாபஸ் வாங்கு!

வாபஸ் வாங்கும்வரை தொடர் போராட்டம்

முதல் கட்டமாக...

கண்டன ஆர்ப்பாட்டம்நாள் : 04.09.2023 திங்கள் மாலை 5 மணி

இடம்: மாவட்டக் கல்வி அலுவலகம் தொடக்கக் கல்வி

விருதுநகர்இப்படிக்கு 

TNPTF,விருநகர் மாவட்டம்TEACHERS NEWSNo comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459