மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கிடையாது: உயர் நீதிமன்றம்(Chennai high court) உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

29/08/2023

மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கிடையாது: உயர் நீதிமன்றம்(Chennai high court) உத்தரவு

 Tamil_News_large_3416767

இரண்டு குழந்தைகளுக்கு பின், அடுத்ததாக பிறந்த இரட்டை குழந்தைக்கும் பேறுகால விடுப்பு வழங்க கோரிய, பள்ளிக் கல்வித் துறை ஊழியரின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், உதவியாளராக பணியாற்றுபவருக்கு, முதல் திருமணம் வாயிலாக, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.Join Telegram


அவரது கணவர் இறந்ததால், இரண்டாவதாக திருமணம் செய்தார்; இரட்டை குழந்தை பெற்றார். கருவுற்றிருக்கும்போதே, 11 மாத பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார்; மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


மனுவில், 'அரசுப் பணியில் சேர்வதற்கு முன், இரண்டு குழந்தைகள் பிறந்தன. பணியில் சேர்ந்த பின், இரண்டாவது திருமணம் வாயிலாக, இரட்டை குழந்தைகள் பிறந்தன. பேறுகால விடுமுறை இதுவரை எடுக்கவில்லை என்பதால், விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு' என கூறப்பட்டது.


அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண், கூடுதல் பிளீடர் அருண்குமார் ஆஜராகி, 'இரண்டு குழந்தைகள் பிறப்புக்கு மட்டுமே, பேறுகால விடுமுறை வழங்க முடியும் என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


'மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை பெற உரிமை இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு தான் பேறுகால விடுமுறை என்பது அரசின் கொள்கை' என்றனர்.

மனுவை விசாரித்த, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:


மனுதாரருக்கு, நான்கு குழந்தைகள் உள்ளன. மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை இல்லை என்பது அரசின் கொள்கை மற்றும் அடிப்படை விதியாக உள்ளது.


எனவே, பேறுகால சலுகை சட்டத்தின் அடிப்படையில், பேறுகால விடுமுறையை, உரிமையாக மனுதாரர் கோர முடியாது. விடுமுறை நிராகரித்தது செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதேபோன்று, மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை கோரி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை தாக்கல் செய்த மனுவில், 'பணியில் சேர்வதற்கு முன், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


'பேறுகால சலுகையை அனுபவிக்காததால், மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.


'மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை கோர உரிமையில்லை' எனக் கூறி மனுவை, நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்தார்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459