CBSE - பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




02/08/2023

CBSE - பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு வெளியீடு

 1076967


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்பட்டது.

அதன்படி பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 1,20,742 பேர் துணைத் தேர்வு எழுதினர். இதில் 57,331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 75 மதிப்பெண்ணுக்கு மேல்402 பேரும், 60 முதல் 75 மதிப்பெண்ணுக்குள் 3,101 பேரும் பெற்றுள்ளனர். அதேபோல், பொதுத்தேர்வில் பெற்றதை கூடுதல் மதிப்பெண் பெற விரும்பி முன்னேற்றத் தேர்வை 60,419 மாணவர்கள் எழுதினர். அதில் 59 சதவீதம் பேர் கூடுதல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மேலும், 35 சதவீதம் பேர் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்ணைவிட குறைவாகவும், 6 சதவீதம் மாணவர்கள் அதே மதிப்பெண்ணையும் பெற்றுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459