மதிப்பீட்டு புலம் - வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி காணொளி!! - ஆசிரியர் மலர்

Latest

30/08/2023

மதிப்பீட்டு புலம் - வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி காணொளி!!

மதிப்பீட்டு புலம் - 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு/ திறன்வழி  மதிப்பீட்டு தேர்வு.


🈸அனைத்து அரசு பள்ளிகள்(நடுநிலை,உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகள்) 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு *கற்றல் விளைவு/திறன்வழி  மதிப்பீட்டு தேர்வு நடத்த வேண்டும்.


  🈸 கால அட்டவணை


6ஆம் வகுப்பு - 29.08.2023

7 ஆம் வகுப்பு - 30.08.2023

8 ஆம் வகுப்பு - 31.08.2023

9 ஆம் வகுப்பு- 01.09.2023


🈸மதிப்பீட்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டு புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


Join Telegram


🈸தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக பிற்பகல் 2 மணி முதல்  அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்திட வேண்டும்.


🈸வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்

🈸தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப் பொறியை(Printer) பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.


🈸ஒவ்வொரு கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீட்டு தேர்வையும் 40 மணித்துளி களில் நிறைவு செய்ய வேண்டும்.


🈸ஒவ்வொரு தேர்வும் 25 ஒரு மதிப்பெண் கொள் குறி வகை வினாக்களை கொண்டிருக்கும்.


🈸ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை தாளிலேயே மாணவர்களை குறிப்பிட செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாட வேளையில் தேர்வு நாள் அன்று தவறாமல் நடத்த வேண்டும்.

🈸இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக அந்நாள் வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.


🈸எவ்வித குறிக்கீடும் இன்றி மாணவர்கள் தாங்களாகவே விடைத்தெரிவுகளை மேற்கொள்வதை தலைமை ஆசிரியர்களும் வகுப்பு ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.


🈸மாணவர்கள் விடையளித்த வினாத்தாள்களை மீண்டும் பெற்று மதிப்பெண்ணிட்டு வகுப்பு ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும்.


🈸தேர்வுக்கு பின்வரும் கற்பித்தல் நாட்களில் இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினாக்கள் அமைப்பு, தேர்வுகளில் இவ்வகை வினாக்கள் எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தின் ஊடாக அனைத்து ஆசிரியர்களும்  தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாட வேண்டும்.


🈸மாதம் ஒருமுறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் கற்றல்  விளைவு/திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


🈸வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி காணொளி


https://youtu.be/90Mpn1cSXc8


முகஅ.

தஞ்சாவூர்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459