அனைத்து பள்ளிகளிலும் Team Visit - CEO -மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். - ஆசிரியர் மலர்

Latest

05/07/2023

அனைத்து பள்ளிகளிலும் Team Visit - CEO -மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

 

 தொடக்கக் கல்வித் துறையை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. ஏனைய எல்லா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவரவர்கள்  அவரவர் பணியினை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர் ஏதோ கல்வி அமைச்சர் அவர்களுடைய தனி நிர்வாகத்தினை பெற்றவர் போல் விதிகளை மீறி அத்துமீறிய  செயல்பாடுகளால் ஆக்கிரமித்து கூடுதலாக விளம்பரப்படுத்திக் கொண்டு அனைவரையும் Team Visit என்ற பெயரில் முற்றிலும் தொடக்கக் கல்வியை நிர்வாகத்தினை செயலிழக்கச் செய்து ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் மீது வெறுப்புணர்வினை உச்சம் தொடுகின்ற அளவுக்கு ஈடுபட்டு வருகிறார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் சென்ற ஆண்டுக்கு வினாத்தாள்களுக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் இவர் சென்ற ஆண்டு வினாத்தாள்களுக்கு இந்தாண்டு பணம் வசூல் செய்து வருகிறார்.


வாக்கு வங்கியினை முற்றிலும் சேதாரப் படுத்தி வருகிறார். முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஆக்கிரமிக்கின்ற செயல்பாடுகள் நாளை முதல் தொடருமேயானால்....  இரண்டு மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கங்கள் பறிபோன அவர்களின்  சுதந்திர உணர்வினை பாதுகாப்பதற்காக முதன்மைக் கல்வி அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.


 எங்களைப் போன்றவர்களுக்கு இரண்டு கவலை உண்டு. ஒன்று ஆசிரியர்களின் அன்றாட நடவடிக்கைகள் அரசின் மீதும், பள்ளிக்கல்வித்துறையின் மீதும் கடுமையான விமர்சனம் செய்வதற்காக தூண்டி விடுகிறார்.


இரண்டு தொடக்கக் கல்வித் துறையும் பள்ளிக் கல்வித் துறையும் முரண்பட்டு செயல்படக்கூடிய நிலைமையும் உருவாக்கி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கல்வி அமைச்சர் அவருடன் இருக்கின்ற நெருக்கத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார். இது மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்தும் செயலாகும். பள்ளி பார்வை என்பது வேறு; அதிகாரத்தினை இறக்கை கட்டி கொண்டு பறப்பது போல் நடப்பது என்பது வேறு;


 தாங்கள் உடனடியாக தலையிட்டு அவரது நடவடிக்கைகளை  நெறிப்படுத்திட வேணுமாய் பெரிதும் வலியுறுத்திக்  கேட்டுக்கொள்கிறோம்.


 மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் அவர் யார் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்?. என்பதை முதலில் ஆய்வு செய்து கொண்டு அவருடைய செயல்பாடுகளை உடன் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமாய் உரிமையுடன்கே ட்டுக்கொள்கிறோம்.


 இவரது செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றுகூடி ஆசிரியர்களின் நலனை, தொடக்கக் கல்வித் துறையின் சுதந்திரத்தினை பாதுகாப்பதற்கான களப்பணியினை மேற்கொள்வோம்!.. என்பதையும் உரிமை உறவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


திரு சிவக்குமார் அவர்கள் பணியாற்றிய அலுவலகங்களில் எல்லாம் ஆய்வு செய்து பார்த்தால்... கோப்புகளை சரிபார்த்தலில் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணாத அலுவலர்தான் திரு.சிவகுமார் என்பது சான்றாகும்.


உடனடி தீர்வு வேண்டுகிறோம்....


வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

TEACHERS NEWS

1 comment:

  1. Kanchipuram district la kooda question paper amount collect பண்ணாங்க sir.

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459