நீட் தேர்வில் ஆள்மாறட்டம்: மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது - ஆசிரியர் மலர்

Latest

 




04/07/2023

நீட் தேர்வில் ஆள்மாறட்டம்: மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறட்டம் செய்த கும்பலை சேர்ந்த 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறட்டம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மஹாவீர், ஜிஜேந்திரா ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறட்ட மோசடி செய்வதற்கு மூளையாக செயல்பட்ட நரேஷ் பிஷ்னோய் என்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுத வந்த சஞ்சு யாதவ் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Join Telegram

நீட் தேர்வில் ஆள்மாறட்டம் செய்த விவகாரத்தில் இதுவரை 4 மாணவர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய ரூ.7 லட்சம் பேரம் பேசியதாக நரேஷ் பிஷ்னோய் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றதாகவும் எஞ்சிய ரூ.6 லட்சத்தை தேர்வு எழுதியபின் பெற ஒப்பந்தம் செய்திருந்ததாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கலாம் என டெல்லி போலீஸ் சந்தேகித்துள்ளனர். விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459